தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது

திண்டுக்கல் அருகே புதன்கிழமை, தந்தையை பாட்டிலால் குத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே புதன்கிழமை, தந்தையை பாட்டிலால் குத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள மாலைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (56). இவரது மகன் ஜெகன் (25). இருவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருகின்றனா். தந்தைக்கும், மகனுக்கும் இடையே புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகன் திடீரென அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து, சுப்பிரமணியை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com