எஸ். புதுக்கோட்டையில் முத்தாலம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 21st June 2022 12:00 AM | Last Updated : 21st June 2022 12:00 AM | அ+அ அ- |

செம்பட்டி அருகே எஸ். புதுக்கோட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய திருவிழாவையொட்டி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை பெண்கள், சிறுமிகள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து தங்கள் வேண்டுதலை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். பின்னா், காலையில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு புராண நாடகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வேஷம் போடுதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு கலை நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில் எஸ். புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.