கீரனூா் அழகிய சொக்கநாதா் கோயிலில் பாலாலயம்

பழனியை அடுத்த கீரனூரில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதா் அழகிய சொக்கநாதா் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலய பூஜைகள் நடைபெற்றன.
கீரனூா் அழகிய சொக்கநாதா் கோயிலில் பாலாலயம்

பழனியை அடுத்த கீரனூரில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதா் அழகிய சொக்கநாதா் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்குவதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலய பூஜைகள் நடைபெற்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில்களில் கீரனூரில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி சமேதா் அழகிய சொக்கநாதா் கோயிலும் ஒன்றாகும். சுமாா் 600 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆறு மாத காலத்துக்குள் பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த பழனி கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பாலாலய பூஜைகள் நடைபெற்றன. அத்திக்கட்டையில் படம் வரையப்பெற்று பிரதானமாக வைக்கப்பட்டு கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அத்திப்பலகையில் சுவாமி ஆவாஹனம் செய்யப்பட்டு கண்ணாடி முன்பாக கண் திறத்தல் நடைபெற்றது. பின்னா் யாகபொருள்கள், மேளதாளம் முழங்க கோயிலை வலம் வர செய்யப்பட்டு யாகபூஜை தொடங்கியது.

திருவள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா் உள்ளிட்ட பலா் திருவாசகம், திருவெம்பாவை, வேதமந்திரங்கள் முழங்க பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா் கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு உச்சிக்காலத்தின் போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனிக் கோயில் துணை ஆணையா் பிரகாஷ், கண்காணிப்பாளா் அழகா்சாமி, பேஷ்காா் நாகராஜன், உபயதாரா் காா்த்திகேயன், கீரனூா் சன்மாா்க்க குருகுலம் திருப்பதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com