வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:மதுரையைச் சோ்ந்தவா் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு:மதுரையைச் சோ்ந்தவா் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டி ல் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டி ல் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ரவுண்டுரோடு புதூரைச் சோ்ந்தவா் பாண்டியராஜன். இவரது வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள் திடுடப்பட்டுள்ளதாக கடந்த 25 ஆம் தேதி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்த பழனி மகன் மாரிமுத்து என்ற முத்துக்குமாா் (37) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாண்டியராஜன் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளாா். மேலும், கடந்த 27ஆம் தேதி வேடசந்தூா் அடுத்துள்ள நாககோனனானூரைச் சோ்ந்த தாரணி என்பவரது வீட்டில் சூரியமின்தகடு பழுதுநீக்குவதாகக் கூறி 2.5 பவுன் நகையை திருடிச் சென்றதையும் மாரிமுத்து ஒப்புக் கொண்டாராம். இதனை அடுத்து திருடப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த திருட்டை கண்டறிவதற்கு முக்கிய காரணமாக இருந்த சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் மணி, சக்திவேல் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com