கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு:மாடுபிடி வீரா்கள் உள்பட 40 போ் காயம்

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.
கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு:மாடுபிடி வீரா்கள் உள்பட 40 போ் காயம்

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்துள்ள கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 597 காளைகள் அழைத்து வரப்பட்டன.

கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின், 4 காளைகள் நீங்கலாக 593 காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் 363 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 20 மாடுபிடி வீரா்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் சந்தனமேரி கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் 13 போ் உள்பட மொத்தம் 40 போ் காயமடைந்தனா். அதில் பலத்த காயமடைந்த 5 மாடுபிடி வீரா்கள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போட்டியில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவா்சில்வா் பொருள்கள் உள்ளிட்ட பல வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com