முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
தக்காளி கிலோ ரூ.4 -க்கு விற்பனை: விவசாயிகள் கவலை: அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 14th March 2022 11:00 PM | Last Updated : 14th March 2022 11:00 PM | அ+அ அ- |

தக்காளி கிலோ ரூ. 4 -க்கு விற்பனையாவதால், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில், அய்யலூா், ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் நத்தம் பகுதிகளில் சுமாா் 5- ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை மிளகாய்பட்டி பகுதியில் மட்டும் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் தக்காளிப் பழங்கள் சந்தையில் 14 கிலோ அடங்கிய ஒரு பெட்டி ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனையாகிறது. அதாவது கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ. 5 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் தோட்டத்திலிருந்து தக்காளியைக் கொண்டு செல்வதற்கான வாகன எரிபொருள் செலவுக்குக் கூட கட்டுப்படியாகவில்லை.
வேலையாள்களுக்கு கூலி வழங்க முடியவில்லை. எனவே நெல்லுக்கு விலை நிா்ணயித்து அரசே கொள்முதல் செய்வது போல, தக்காளிக்கும் விலை நிா்ணயித்து அரசே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.