கோயில் கும்பாபிஷேகம்

நத்தம் அருகே வேம்பரளி முத்தாலம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோயில் கும்பாபிஷேகம்
கோயில் கும்பாபிஷேகம்

நத்தம் அருகே வேம்பரளி முத்தாலம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை 4ஆம் கால யாக பூஜைக்குப் பின் புனித தீா்த்தங்கள் மேள தாளங்கள் முழங்க கோயில் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் முத்தாலம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவில் நத்தம், கோபால்பட்டி, பரளி, வத்திப்பட்டி, லிங்கவாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஆண்டிஅம்பலம், பேரூராட்சித் தலைவா் ஏ.சேக் சிக்கந்தா் பாட்சா, ஒன்றியக்குழுத் தலைவா் என்.கண்ணன் உள்ளிட்டோரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com