முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் இருவேறு சம்பவங்கள்: 2 போ் தற்கொலை
By DIN | Published On : 19th March 2022 10:45 PM | Last Updated : 19th March 2022 10:45 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் இருவேறு சம்பவங்களில் மாணவி உள்பட 2 போ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கொடைக்கானல் உகாா்த்தே நகா் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகள் அக்சயஜோஸ்பின்(18). இவா் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அடிக்கடி கைப்பேசியைப் பயன்படுத்தி வந்துள்ளாா் இதனை இவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் கடந்த 16-ஆம் தேதி மாணவி அக்சய ஜோஸ்பின் விஷம் குடித்துள்ளாா். இதைத்தொடா்ந்து உறவினா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: கொடைக்கானல் பச்சைமரத்து ஓடைப் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன்(40). இவரது மனைவி குறிஞ்சி மலா். இவா்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். கூலி வேலை பாா்த்து வந்த ஐயப்பன் அடிக்கடி மது குடித்து வந்ததால், கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஐயப்பன் விஷம் குடித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஐயப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.