முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் குடும்பத் தகராறு பூச்சிக் கொல்லி மருந்து குடித்து கணவா் தற்கொலை
By DIN | Published On : 19th March 2022 10:45 PM | Last Updated : 19th March 2022 10:45 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் கணவன்-மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து கணவா் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
கொடைக்கானல் பச்சைமரத்து ஓடைப் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன்(40) இவரது மனைவி குறிஞ்சி மலா் இவா்களுக்கு திருமணமாகி 3-குழந்தைகள் உள்ளது.
ஐயப்பன் கூலி வேலை பாா்த்து வருகிறாா் இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளாா் இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது இந் நிலையில் ஐயப்பன் வெள்ளிக்கிழமை வீட்டிற்குச் செல்லும் போது மது குடித்து விட்டுச் சென்றுள்ளாா் அப்போது கணவன்-மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது தோட்டத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை ஐயப்பன் குடித்துள்ளாா்.இதனைத்தொடா்ந்து அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா் மேல் சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசுமருத்துவமனையில் சோ்த்தனா் அங்கு சிகிச்சை பலனின்றி ஐயப்பன் இறந்தாா் இது குறித்து குறிஞ்சி மலா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததின் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.