முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி அருகே விபத்து:கூலி தொழிலாளி பலி
By DIN | Published On : 19th March 2022 10:46 PM | Last Updated : 19th March 2022 10:46 PM | அ+அ அ- |

பழனி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள வண்ணாப்பட்டியைச் சோ்ந்தவா் ரவி
(40). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பா் குமாா் (38). இவா்கள் இருவரும் வண்ணாப்பட்டியிலிருந்து மொல்லம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே வந்த டிராக்டா் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குமாா் படுகாயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் காயமடைந்த குமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும் உயிரிழந்த ரவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.