கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவா் கைது
By DIN | Published On : 02nd May 2022 11:09 PM | Last Updated : 02nd May 2022 11:09 PM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்கப்பட்டு வருவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, வில்பட்டி பிரிவு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா் வைத்திருந்த பையில் விற்பனைக்காக 10 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
உடனே மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை விசாரித்ததில் வில்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜ் (59) எனத் தெரியவந்தது. போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.