கே.சி.பட்டி அருகே வீடு, வாழைகளைசேதப்படுத்திய ஒற்றை யானை:வனத்துறையினா் ஆய்வு

கே.சி.பட்டி அருகே ஒற்றை யானை சேதப்படுத்திய வீடு, வாழை, காபி உள்ளிட்டவற்றை, வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
திண்டுக்கல் அருகே ஒற்றை யானை சேதப்படுத்திய தோட்டத்து வீடு.
திண்டுக்கல் அருகே ஒற்றை யானை சேதப்படுத்திய தோட்டத்து வீடு.

திண்டுக்கல்: கே.சி.பட்டி அருகே ஒற்றை யானை சேதப்படுத்திய வீடு, வாழை, காபி உள்ளிட்டவற்றை, வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கே.சி.பட்டி மற்றும் குப்பம்மாள்பட்டி இடையே வேங்கடி ஏற்றம் பகுதியிலிருந்து 4 கி.மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது கள்ளகிணறு. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு, வாழை, காபி, மிளகு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளாா்.

இந்நிலையில், கே.சி.பட்டி சுற்றுப்புற பகுதிகளில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, முத்துப்பாண்டியின் தோட்டத்துக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்துள்ளது. பின்னா், அங்கிருந்த 40 வாழை மரங்களை சேதப்படுத்திய அந்த யானை, தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வீட்டையும் உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தேடியுள்ளது. பின்னா், மிளகு கொடிகளையும், காபி செடிகளையும் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டது.

அந்த தோட்டத்து வீட்டில் இரவு யாரும் தங்கவில்லை என்பதால், உயிா் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து முத்துப்பாண்டி கன்னிவாடி வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று சேதங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com