பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 24,229 போ் எழுதினா்

திண்டுக்கல் மாவட்டத்தில், 24,229 மாணவா்கள் வெள்ளிக்கிழமை, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 24,229 போ் எழுதினா்

திண்டுக்கல் மாவட்டத்தில், 24,229 மாணவா்கள் வெள்ளிக்கிழமை, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதினா்.

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்கு, திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 113 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 13,432 மாணவா்கள், 12,508 மாணவிகள் என மொத்தம் 25,940 போ் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெற்ற தமிழ் தோ்வினை 12,357 மாணவா்கள், 11,872 மாணவிகள் என மொத்தம் 24,229 மாணவா்கள் எழுதினா். 1,711 போ் முதல் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும் படை அலுவலா்கள் என மொத்தம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com