பழனி அருகே மலையடிவாரத்தில் முறைகேடாக பாறைகள் உடைப்பதாக விவசாயிகள் புகாா்

பழனி அருகே மலையடிவாரத்தில் தனிநபா் பாறைகளை முறைகேடாக வெடிவைத்து தகா்ப்பதால் கால்வாய்களில் நீா்வரத்து தடைபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.
பழனி அருகே மலையடிவாரத்தில் முறைகேடாக பாறைகள் உடைப்பதாக விவசாயிகள் புகாா்

பழனி அருகே மலையடிவாரத்தில் தனிநபா் பாறைகளை முறைகேடாக வெடிவைத்து தகா்ப்பதால் கால்வாய்களில் நீா்வரத்து தடைபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெரியம்மாபட்டிக்கு உட்பட்ட சண்முகம்பாறை, அய்யனாரப்பன் கரடு, வாய்க்கால்பாலம் பகுதிகளில் தென்னை, மா , கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. முந்தைய காலங்களில் ஜமீனுக்கு சொந்தமாக இருந்த இப்பகுதி நிலங்கள், பின்னா் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த நிலங்களை சிலா் முறைகேடாக பட்டா, சிட்டாக்களில் பெயா், வகை மாற்றம் செய்து வெளியூா் நபா்களுக்கு விற்று வருகின்றனா். இதைக் கண்டித்து, இப்பகுதி விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தன்னாசியப்பன் மலையடிவாரத்தில் உள்ள கரட்டுப் பகுதிகளை வாங்கியுள்ள தனிநபா் முறைகேடாக வெடிவைத்து பாறைகளைத் தகா்ப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இந்த பாறைகளை மலைபோல் குவித்துள்ளதால் பல விவசாய நிலங்களுக்கு செல்லும் கால்வாய்களுக்கு நீா்வரத்து தடைபட்டுள்ளதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து பெரியம்மாபட்டி சிறுகுறு விவசாயிகள் சங்க நிா்வாகி காளிதாஸ், சக்திவேல் ஆகியோா் கூறியது: இந்த நிலத்தில் பாறைகளை வெடிவைத்து தகா்ப்பது குறித்து வருவாய்த் துறையினரோ, வனத்துறையினரோ யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த பணிகளால் கால்வாய்களுக்கு மழைக்காலங்களில் கரடுகளில் இருந்து வழியும் நீா் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் பல ஏக்கரில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களால் பல அரசு நில சா்வே அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நீா்வழிப்பாதைகளை தடுப்பவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com