முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் பாதிப்பு: விலை அதிகரிப்பால் விற்பனையும் சரிவு
By DIN | Published On : 08th May 2022 11:34 PM | Last Updated : 08th May 2022 11:34 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளதால் விற்பனை சரிந்துள்ளது.
கொடைக்கானல் பகுதிகளான அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், அட்டக்கடி, சகாயபுரம், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பிளம்ஸ் மரங்கள் உள்ளன.
பொதுவாக ஏப்ரல் மாதம் பிளம்ஸ் சீசன் தொடங்கி ஜூன் மாதம் வரை நன்கு விளையும். ஆனால் கொடைக்கானலில் நிகழாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பிளம்ஸ் மரங்களிலிருந்த பூக்கள் குறையத் தொடங்கின. மேலும் பிளம்ஸ் பழங்களில் கரும்புள்ளி நோய் தாக்க ஆரம்பித்தது. விளைச்சல் குறைந்து, தரமும் குறைந்த பிளம்ஸ் பழங்கள் கிலோ ரூ.200-க்கு கடைகளில் விற்பனை செய்கின்றனா். இதனால் கடைக்கு விற்பனைக்கு வந்த பிளம்ஸ் பழங்களை வாங்க சுற்றுலாப் பயணிகள் தயக்கம் காட்டுகின்றனா். இதனால் பிளம்ஸ் பழங்களின் விற்பனை சரிந்ததால், வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.