முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 08th May 2022 02:01 AM | Last Updated : 08th May 2022 02:01 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான காப்பிலியபட்டி ஊராட்சியில் உள்ள உரக்கிடங்கில் மியாவாக்கி முறையிலான அடா்வனக் காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு நகராட்சித் தலைவா் கே.திருமலைசாமி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஆணையா் ப.தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா். இதில் காப்பியபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சிவபாக்கியம் ராமசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.