முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
உலக செஞ்சிலுவை சங்க தினம்
By DIN | Published On : 08th May 2022 11:42 PM | Last Updated : 08th May 2022 11:42 PM | அ+அ அ- |

உலக செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மாபெரும் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் முகிழம் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன், துணைத் தலைவா் மு.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
முகாமில், முகிழம் அகாதெமி மாணவா்கள் 130 போ், காந்திகிராம கிராமியப் பல்கலை. மாணவா்கள் 20 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினா். அதனைத் தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு சுகாதாரப் பெட்டகம் வழங்கப்பட்டது.
இளம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், இளம் செஞ்சிலுவை அமைப்பை சிறப்பாக செயல்படுத்தி வரும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் விருது வழங்கி கெளரவித்தாா்.
நிகழ்ச்சியில் காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தா்(பொ) டி.ரங்கநாதன், செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் சையது அபுதாஹீா், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் துணைப் பொது மேலாளா் டி.முரளி, முகிழம் அகாதெமியின் இயக்குநா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.