முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மலைச் சாலைகளில் சிறு, சிறு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிப்பட்டனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இரவில் சிறிது நேரம் மழை பெய்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தகரங்கள், மேற்கூரைகள், பதாகைகள் பறந்து விழுந்தன. மேலும் மலைச்சாலைகளில் சிறு, சிறு மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. ஆனால் போக்குவரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அதே சமயம் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் பாதிப்படைந்தனா்.
இரவிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் காரணமாக குளுமை குறைந்திருந்த நிலையில் காற்றுடன் சாரல் மழையால் மீண்டும் குளுமையான சீதோஷன நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.