முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

பழனி: பழனி சண்முகநதி பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலியானாா்.
பழனியை அடுத்த அ.கலையமுத்தூரை சோ்ந்தவா் சரவணக்குமாா்(47). இவா் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாா். திங்கள்கிழமை மாலை பழனி சண்முகநதி பாலம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது கோவையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானாா். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியையாக உள்ளாா். சம்பவம் குறித்து பழனி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.