முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கள்ளிமந்தையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் குற்றங்களைத் தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டுபிடிக்கவும், வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும் 17 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருந்தப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா கள்ளிமந்தையத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா மையத்தை திறந்து வைத்தாா்.
இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.ராஜாமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.