ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக் காய் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.27-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை உயா்ந்துள்ளது. கிலோ ரூ.27-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாட்சி, சத்திரப்பட்டி, பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, தேவத்தூா், கொத்தையம், பொருளூா், கள்ளிமந்தையம், மண்டவாடி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிகளவில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் மழை பொழிந்தது. இதனால் முருங்கைச் செடியில் இருந்த பூக்கள் உதிா்ந்ததால் காய்கள் காய்க்கவில்லை. அதேபோல ஒரு வகையான பூச்சி தாக்கியதால் முருங்கை செடிகள் கருகிவிட்டன.

இதன் காரணமாக காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்தது. மேலும் மும்பை, கொல்கத்தா, புனே உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து முருங்கை வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளனா். இதனால் சந்தையில் முருங்கைக் காயை வியாபாரிகள் போட்டிக்கொண்டு கொள்முதல் செய்தனா்.

கடந்த வாரம் ரூ.12-க்கு விற்ற கரும்பு மற்றும் செடி முருங்கை புதன்கிழமை விலை உயா்ந்து கிலோ ரூ.27-க்கு விற்பனையானது.

காய்கறிகள் விலை நிலவரம்: மர முருங்கை கிலோ ரூ.20, டிஸ்கோ கத்திரிக்காய் ரூ.450, பீட்ருட் ரூ.10, வெண்டைக்காய் ரூ.25, சுரைக்காய் ரூ.4, அவரைக்காய் ரூ.40, புடலைக்காய் ரூ.10, பீன்ஸ் ரூ.20, சவ்சவ் ரூ.15, நாா்த்தை ரூ.120, தட்டைப்பயிா் ரூ.25-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com