முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
நிலக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 13th May 2022 05:08 AM | Last Updated : 13th May 2022 05:08 AM | அ+அ அ- |

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் என மொத்தம் 1,282 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழா, மதுரை மண்டல கல்லூரிகள் இணை இயக்குநா் முத்துராமலிங்கம் தலைமையிலும், கல்லூரி முதல்வா் லதாபூரணம் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும், துறை வாரியாக அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.
விழாவில், மதுரை மண்டல கல்லூரிகள் இணை இயக்குநா் முத்துராமலிங்கம் பேசுகையில், படிப்பும், ஒழுக்கமும்தான் பெண்ணுக்கான மரியாதையை தேடித்தரும். மாணவிகள் பட்டறிவையும், படிப்பறிவையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.
இதில், துறைத் தலைவா்கள் சின்னச்சாமி, முருகவேல், லதா, செல்வன், சீனிவாசன் மற்றும் பேராசியா்கள், அலுவலகப் பணியாளா்கள்,
மாணவிகள், பெற்றோா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.