ஆயக்குடியில் மா்ம நோயால் செம்மறி ஆடுகள் பலி: கால்நடை துறை ஆய்வு

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடுகள் மா்மநோயால் பலியாவதைத் தொடா்ந்து, ஆடுகளின் மாதிரிகள் கால்நடைத் துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடுகள் மா்மநோயால் பலியாவதைத் தொடா்ந்து, ஆடுகளின் மாதிரிகள் கால்நடைத் துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆயக்குடி, சட்டப்பாறை, பொன்னிமலை சித்தன் கரடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பட்டி அமைத்து வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளா்த்து வருகின்றனா். இந்நிலையில், சட்டப்பாறை சாலை பகுதியைச் சோ்ந்த திருப்பதி என்ற விவசாயியின் பட்டியில் உள்ள செம்மறி ஆடுகள் மா்ம நோயால் தொடா்ந்து இறந்து வருகின்றன.

இது குறித்து அவா் கூறியது: ஆடுகளுக்கு காய்ச்சல், தோல் பாதிப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்து விடுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 20 ஆடுகள் இறந்துள்ளன. இந்த மா்ம நோய் பிற ஆடுகளுக்கும் பரவுவதை தடுக்க, ஆடுகளை புதைத்து வருகிறேன். சமீபத்தில் வேறு ஒருவரிடம் வாங்கிய ஆடுகள் மூலமாகக் கூட இந்நோய் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்தாா்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் கூறியது: ஆயக்குடியில் உள்ள மற்ற விவசாயிகளின் ஆடுகளுக்கு இது போன்ற பாதிப்பு இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்துக்குச் சென்று கால்நடை மருத்துவா்களான செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோா் ஆடுகளின் தோல், ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனா். சோதனை முடிவில், அது அம்மை பாதிப்பா என்பது தெரியவரும்.

அதைத் தொடா்ந்து, மற்ற ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், பிற ஆடுகளுக்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com