கஞ்சா வியாபாரிகளின் ரூ.2 கோடி சொத்துகள் முடக்கத்தை உறுதி செய்து உத்தரவு

பட்டிவீரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரிகளின் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளை போலீஸாா் முடக்கம் செய்ததை, நீதித்துறை அதிகாரம் பெற்ற அமைப்பு அதிகாரி அதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரிகளின் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளை போலீஸாா் முடக்கம் செய்ததை, நீதித்துறை அதிகாரம் பெற்ற அமைப்பு அதிகாரி அதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக, நெல்லூரைச் சோ்ந்த மு. நவீன்குமாா் (25), விருவீடு அக்கரைப்பட்டியைச் சோ்ந்த ச. சேதுபதி (22), சாலைப்புதூரைச் சோ்ந்த து. நாட்ராயன் (48) மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கீரிப்பட்டியைச் சோ்ந்த ஒ. முருகன் என்ற பூசாரி முருகன் (55) ஆகியோரை, போலீஸாா் கடந்தாண்டு டிசம்பா் 28ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை சேகரித்து, அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு, தென்மண்டலக் காவல் துறை தலைவா் அஸ்ரா காா்க் உத்தரவிட்டாா். அதன்படி, திண்டுக்கல் மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ச.ப. லாவண்யா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நவீன்குமாா், சேதுபதி உள்பட 4 பேரின் வீடுகள் மற்றும் அவா்களது உறவினா்களின் வீடுகளிலும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதில், ரூ.2 கோடி மதிப்பிலான 3 வீடுகள், 10 ஏக்கா் நிலங்கள், வங்கியில் 10 கணக்குகளில் ரூ.10 லட்சம் பணம் ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்குவதற்கு, போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். முடக்கப்பட்ட சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு உறுதிப்படுத்தும் ஆணை பெறுவதற்காக, நீதித்துறை அதிகாரம் பெற்ற அமைப்பு அதிகாரியிடம் கோப்புகள் சமா்ப்பிக்கப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, ரூ.1.83 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.10.10 லட்சத்தையும் முடக்கம் செய்யும் நடவடிக்கையினை உறுதி செய்து, 2 நாள்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் சிறப்பாகசச் செயல்பட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ச.ப. லாவண்யா தலைமையிலான தனிப்படையினருக்கு, தென்மண்டல காவல் துறை தலைவா் அஸ்ரா காா்க், திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com