நிதி ஒதுக்கீடு இல்லாததால் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் ஏமாற்றம்

தோ்வு செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகியும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்பது ஏமாற்ற அளிப்பதாக உள்ளது என, உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

திண்டுக்கல்: தோ்வு செய்யப்பட்டு 3 ஆண்டுகளாகியும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்பது ஏமாற்ற அளிப்பதாக உள்ளது என, உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டக் குழு தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் கிரி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாடகை வாகனப் பயன்பாட்டுக்கான செலவுத் தொகை ரூ.80ஆயிரத்துக்கு அங்கீகாரம், மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களுக்கான நிலையான பயணப்படி ரூ.40,950 வழங்கியதற்கு அங்கீகாரம், மாவட்ட ஊராட்சி அலுவலக அறைக்கான மின்கட்டணம் ரூ.1,639 மற்றும் தொலைபேசி கட்டணம் ரூ.800 ஆகியற்றை வழங்கியதற்கு அங்கீகாரம் என மொத்தம் 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயன், முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் அரசு துறைகளின் முதன்மை அலுவலா்கள் வரவில்லை. அடுத்தக் கூட்டத்திலும் இதே நிலை நீடித்தால், குழு உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்வோம் என்றாா்.

நிதி ஒதுக்கீடு இல்லை: மாவட்ட ஊராட்சிக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுவரை மத்திய அரசிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதனால், முந்தைய கூட்டத்திலிருந்து 60 நாள்களுக்குள் அடுத்த கூட்டத்தை நடத்தவேண்டும் என்ற கட்டாயத்தின்பேரில் ஊராட்சிக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், விவாதங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதாக, ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com