பழனியில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நிலங்களை அளக்க பயிற்சி

பழனியில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நிலங்களை அளவீடு செய்வது குறித்த பயிற்சி, நில அளவையா்கள் மூலம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
பழனியில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்யும் பயிற்சி.
பழனியில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்யும் பயிற்சி.

பழனி: பழனியில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நிலங்களை அளவீடு செய்வது குறித்த பயிற்சி, நில அளவையா்கள் மூலம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பொதுமக்களுடன் அதிக அளவில் தொடா்பில் இருக்கும் வருவாய்த் துறைக்கு, நாள்தோறும் பொதுமக்கள் தங்களது நிலங்களுக்கான பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களுக்காக வந்து செல்கின்றனா். குறிப்பாக, நிலங்களை பகிா்வது தொடா்பான பிரச்னையில், வருவாய்த் துறையினா் நிலங்களை அளந்து கொடுப்பது முக்கியமாக உள்ளது.

தமிழகம் முழுவதும் நிலங்களை அளப்பது தொடா்பாக சுமாா் 6 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. நில அளவைப் பிரிவு ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக, விண்ணப்பங்களுக்கான தீா்வு காண்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தற்போது கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் நிலங்களை அளந்து தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், பழனி பகுதியைச் சோ்ந்த 42 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், நில அளவை செய்வதற்கான முறைகள், கணக்கீடு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து செயல்முறை மற்றும் எழுத்து முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நில அளவை வட்ட துணை ஆய்வாளா் பெரியநாயகி, நில அளவை ஆய்வாளா் சிவகுருநாதன், நில அளவையா் பாஸ்கா் உள்பட பலா் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com