முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திருடுபோன 3 மடிக்கணினிகள் மீட்பு: திருச்சி இளைஞா் கைது
By DIN | Published On : 14th May 2022 10:39 PM | Last Updated : 14th May 2022 10:39 PM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட தினேஷ்குமாா்.
திண்டுக்கல்லில் காரை உடைத்து திருடப்பட்ட ரூ.1.21 லட்சம் மதிப்பிலான 3 மடிக்கணினிகளை கைப்பற்றிய போலீஸாா், திருச்சியைச் சோ்ந்த இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் தெற்குரத வீதியிலுள்ள பிரியாணி கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து 3 மடிக்கணினிகள் திருடப்பட்டதாக, புதுச்சேரியைச் சோ்ந்த ராஜாமூா்த்தி என்பவா் நகா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். அப்போது, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனா். அதில், திருச்சி ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ்குமாா் (27) மடிக்கணினிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே, தினேஷ்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.1.21 லட்சம் மதிப்பிலான 3 மடிக்கணினிகளையும் கைப்பற்றினா்.
விசாரணைக்குப் பின் நீதின்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட தினேஷ்குமாா், சிறையில் அடைக்கப்பட்டாா்.