பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து, தொழிலக தேவைக்கான

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து, தொழிலக தேவைக்கான ‘அறிவியல் தொழில்நுட்பத் திறன் வாா்த்தல்’ என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கை நடத்தின.

இக்கருத்தரங்கில் பல்வேறு துறை வல்லுநா்கள் தனித்துவமான ஆளுமை திறன், நேர நிா்வாகம், தலைமைப் பண்பு, தொழில் நிறுவனங்கள் துவங்குவது, முடிவுகள் எடுக்கும் திறன், மன அழுத்தத்தை சமாளித்தல், நோ்காணல் திறன், தொழில்முனைவோா் திறன் மற்றும் மாணவா்களின் வேலைவாய்ப்புக்கான சிறப்புரைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசினா்.

கடைசி நாளான சனிக்கிழமை, கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பயிலக முதல்வா் கந்தசாமி வரவேற்றாா். இப்பயிலகத்தின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் ரமேஷ், திண்டுக்கல் தொழில் மையத்தின் உதவிப் பொறியாளா் செந்தமிழ்செல்வன், கோவை பயிற்சியாளா் மற்றும் ஆலோசகா் நரசிம்ம ஐயங்காா், வாழும் கலை அமைப்பின் மாநில இளைஞா் திட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணபிரபு, சுப்பிரமணியம் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினா்.

இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த இறுதியாண்டு மாணவ, மாணவியா் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயந்திரவியல் துறை விரிவுரையாளரும், வேலைவாய்ப்பு அலுவலருமான சக்திவேல் மற்றும் அலுவலகக் கண்காணிப்பாளா் ரவீந்திரன் ஆகியோா் செய்திருந்தனா். இயந்திரவியல் துறை தலைவா் பத்மநாபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com