பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் கூட்டம்:சுவாமி தரிசனத்துக்காக 3 மணி நேரம் காத்திருப்பு
By DIN | Published On : 16th May 2022 12:20 AM | Last Updated : 16th May 2022 12:20 AM | அ+அ அ- |

பழனியில் ஞாயிற்றுக்கிழமை வைகாசி பெளா்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவீதியில் அலகு குத்தி வந்த பக்தா்கள்.
பழனியில் ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு கூட்டம் அதிகரித்ததால் சுவாமி தரிசனத்துக்காக பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்தனா்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை, வைகாசி பெளா்ணமி, அக்னிக் கழிவு, முகூா்த்த நாள் என பல விசேஷ தினங்களும் சோ்ந்து வந்ததால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
அடிவாரம், கிரிவீதியில் காணும் இடமெல்லாம் பக்தா்கள் கூட்டமாக காணப்பட்டது. கிரிவீதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்த பக்தா்கள் அலகு குத்தியும், தீா்த்தக் காவடி எடுத்து வந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். மலைக்கோயிலில் பொதுதரிசனத்தில் சுமாா் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் ஏராளமான பக்தா்கள் முடிக்காணிக்கை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இரவு தங்கத்தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சின்னக்குமாரசாமியை வழிபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...