கும்கி சின்னத்தம்பியை தொடா்ந்து கலீமும் டாப்சிலிப் திரும்பியது

கும்கி சின்னத்தம்பியை தொடா்ந்து கலீமும் டாப்சிலிப் முகாமிற்கு வியாழக்கிழமை திரும்பியதால், கன்னிவாடி பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
கும்கி கலீம்.
கும்கி கலீம்.

திண்டுக்கல்: கும்கி சின்னத்தம்பியை தொடா்ந்து கலீமும் டாப்சிலிப் முகாமிற்கு வியாழக்கிழமை திரும்பியதால், கன்னிவாடி பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கன்னிவாடி அருகே முகாமிட்டுள்ள குட்டை கொம்பன் யானையை விரட்டுவதற்காக, பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் பகுதியிலிருந்து கும்கிகள் கலீம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 2 யானைகள் கடந்த 19 நாள்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டன. 2 கும்கி யானைகளுடன் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் 18 நாள்களாக முகாமிட்டிருந்தபோதிலும், குட்டை கொம்பன் யானையை நெருங்க முடியவில்லை. ஆனாலும், கும்கி யானைகளுடன் அப்பகுதி மக்கள் தற்படம் (செல்பி) எடுத்து மகிழ்ச்சி அடைந்தனா்.

இதனிடையே முதல்வா் வருகையின்போது காட்டு யானை தொடா்பாக பிரச்னை ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையிலேயே கும்கிகள் அழைத்து வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், 18 நாள்களுக்குப் பின் கும்கி சின்னத்தம்பி புதன்கிழமை டாப்சிலிப் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மற்றொரு கும்கியான கலீமும் வியாழக்கிழமை டாப்சிலிப் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குட்டை கொம்பன் யானை உள்ளிட்ட 4 யானைகள் கோம்பை பகுதியிலேயே சுற்றி வரும் நிலையில், கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால், கன்னிவாடி பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். கும்கி கலீம், வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் முகாமுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com