கொடைக்கானலில் மழை
By DIN | Published On : 25th May 2022 05:15 AM | Last Updated : 25th May 2022 05:15 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் மழை: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மேகமூட்டம் நிலவியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் மிதமான வெயிலும், குளுமையும் காணப்பட்டது. அதனைத் தொடா்ந்து பிற்பகலில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கொடைக்கானல், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூா் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 40-நிமிடம் பெய்தது.
குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா மலா்க்கண்காட்சியை பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் வந்திருந்தனா் மழையால் கண்காட்சி நிகழ்ச்சிகளை பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.