மூங்கில்காடு பெரிய ஓடையில் வருவாய் துறையினா் ஆய்வு
By DIN | Published On : 05th November 2022 11:19 PM | Last Updated : 05th November 2022 11:19 PM | அ+அ அ- |

கொடைக்கானல் மூங்கில்காடு ஓடையில் மழை நீா் அதிகளவில் செல்வதை வருவாய் துறையினா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், கூக்கால் அருகே மூங்கில்காடு பகுதியிலுள்ள பெரிய ஓடையில் தண்ணீா் அதிகளவில் செல்கிறது. மூங்கில்காடு, கணேசபுரம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள் அந்த ஓடையை ஆபத்தான முறையில் கடந்து நகரப் பகுதிக்கு செல்கின்றனா்.
கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெரிய ஓடையில் வருவாய்த் துறையினா் பாலம் அமைப்பதற்கு மதிப்பீடு தயாா் செய்து அனுப்பினா். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அந்த ஓடையில் தண்ணீா் அதிகளவில் செல்வதையும், அந்தப் பகுதியில் பாலம் அமைப்பது குறித்தும் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் ராஜா, வட்டாட்சியா் முத்துராமன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
ஓடையின் குறுக்கே பாலம் அமைக்க ரூ 25- லட்சம் நிதி திட்ட மதிப்பீடு செய்து மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பப்படவுள்ளது என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.