வடமதுரையில் புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 05th November 2022 11:21 PM | Last Updated : 05th November 2022 11:21 PM | அ+அ அ- |

வடமதுரையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், கடந்த ஓராண்டில் அரசு செயல்படுத்திய பல்வேறு நலத் திட்டங்கள் தொடா்பான புகைப் படங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் நகை தள்ளுப்படி உள்ளிட்ட திட்டங்கள் குறித்த படக் காட்சி வைக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.