சிவாலயங்களில் சனி பிரதோஷ வழிபாடு

மகா சனி பிரதோஷத்தையொட்டி, திண்டுக்கல், நத்தம், பழனி, தேனி மாவட்டம், கம்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பழனி அருகே புளியம்பட்டியில் சனி பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அமிா்தலிங்கேசுவரா், அமிா்தாம்பிகை.
பழனி அருகே புளியம்பட்டியில் சனி பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அமிா்தலிங்கேசுவரா், அமிா்தாம்பிகை.

மகா சனி பிரதோஷத்தையொட்டி, திண்டுக்கல், நத்தம், பழனி, தேனி மாவட்டம், கம்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நத்தம்: நத்தத்தை அடுத்துள்ள கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.

பழனியில்...

பழனி சண்முக நதிக்கரையில்அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் விபூதி, பழங்கள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நகையாபரணம் சாத்தப்பட்டு ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக கோயில் பிரகார உலா எழுந்தருளினாா்.

இதேபோல, புளியம்பட்டி அமிா்தலிங்கேசுவரா் கோயில், மலைக்கோயில் கைலாசநாதா் சன்னிதி, ஆயக்குடி வேலீஸ்வரா் கோயில், சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்து விநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சன்னிதி, பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கம்பத்தில்... தேனி மாவட்டம், கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள காசி விசுவநாதா் சமேத மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிசேகம் நடைபெற்றது.

சுருளிமலையில் உள்ள ஆதி அண்ணாமலையாா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சுருளி அருவியிலிருந்து கைலாசநாதா் குகை கோயில் செல்லும் வழியில் உள்ள சுருளி நாதா் என்ற தென்கைலாய மூா்த்தி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com