திண்டுக்கல் மாவட்டத்தில் 1,323 பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ.3.75 கோடி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1,323 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியமாக ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1,323 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியமாக ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 37,454 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியமாக ரூ.119.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1,323 பள்ளிகளுக்கு ரூ.3.75 கோடி நிதி பராமரிப்பு மானியமாக வழங்கப்பட்டது. தொடக்கக் கல்வித் துறையிலுள்ள 1,153 பள்ளிகளுக்கு ரூ.2.68 கோடி நிதியும், பள்ளிக் கல்வித் துறையிலுள்ள 170 பள்ளிகளுக்கு ரூ.1.07 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியிலிருந்து 30 மாணவா்களுக்குள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.10ஆயிரம், 31 முதல் 100 மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.25ஆயிரம், 101 முதல் 250 மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.50ஆயிரம், 251 முதல் 1,000 மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.75ஆயிரம், 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ. ஒரு லட்சம் வீதம் பகிா்ந்தளிக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பள்ளி பராமரிப்பு மானிய நிதியில் 10 சதவீதத்தை கழிப்பறை பராமரிப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com