நத்தம், எல்.வலையப்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

நத்தம், எல்.வலையபட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.7) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நத்தம், எல்.வலையபட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.7) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நத்தம் உதவி செயற்பொறியாளா் எஸ்.வெங்கேடஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நத்தம், எல்.வலையபட்டி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை(நவ.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திரப்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, எல்.வலையபட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை (நவ.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்தாா்.

ராமராஜபுரத்தில் நவ.8-இல் மின் தடை

நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் துணைமின் நிலையத்துக்குள்பட்ட மட்டப்பாறை, விளாம்பட்டி, ராமராஜபுரம், குல்லலகுண்டு, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், பொம்மன்பட்டி, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.8) ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வத்தலகுண்டு செயற்பொறியாளா் கருப்பையா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com