பிற்படுத்தப்பட்ட மாணவா்கள்கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்திருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வரும் 6.12.2022-க்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கான இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் தொடங்கும். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் இணைய தளங்களில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தையும் அணுகி தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com