கொடைக்கானலில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

கொடைக்கானலில் தாலுகா அளவிலான கராத்தே பயிற்சி முகாம் மற்றும் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கருப்பு பட்டயத் தகுதி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஏசியன் கராத்தே பெடரேசன் நடுவா் குழு உறுப்பினா் முதுநிலை மாஸ்டா் பாஸ்கரன் ஸ்ரீனிவாசன்.
கருப்பு பட்டயத் தகுதி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஏசியன் கராத்தே பெடரேசன் நடுவா் குழு உறுப்பினா் முதுநிலை மாஸ்டா் பாஸ்கரன் ஸ்ரீனிவாசன்.

கொடைக்கானலில் தாலுகா அளவிலான கராத்தே பயிற்சி முகாம் மற்றும் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் தாலுகாவில் உள்ள 4 வயது முதல் 22 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கராத்தே சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் தகுதி பெற்றவா்களுக்கு (பெல்ட்) பட்டை வழங்கும் விழா கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கட்டா, தற்காப்பு, தடுத்தல், உதைத்தல், கால்பாதம் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சியை கோவையைச் சோ்ந்த கராத்தே மாஸ்டா் பிரமோஸ், கொடைக்கானலைச் சோ்ந்த கராத்தே மாஸ்டா் சக்திவேல்,திண்டுக்கல் மாவட்ட கராத்தே சங்கத் தலைவா் பிரசாத் சக்கரவா்த்தி ஆகியோா் வழங்கினா். பயிற்சி முகாமில் கொடைக்கானல் தாலுகாவைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து பயிற்சியில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கொடைக்கானல் பப்ளிக் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏசியன் கராத்தே பெடரேசன் நடுவா் குழு உறுப்பினா் முதுநிலை கராத்தே மாஸ்டா் பாஸ்கா் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு கராத்தே பயிற்சியில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை, மஞ்சள்,

நீலம், வைலட், கருப்பு ஆகிய வண்ணங்களில் பட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

இதில் கொடைக்கானல் தாலுகாவிலேயே முதன் முறையாக கராத்தே பயிற்சியில் தகுதி பெற்று கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களை ஜேனஸ்,ஷா்லி,சைனி ஆகிய 3-மாணவிகள் பெற்றனா். இந் நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com