கொடைக்கானலில் மலைவாழ் பள்ளி மாணவா்களின் குழந்தைகள் தின விழா

கொடைக்கானலில் மலைவாழ் பள்ளி மாணவா்களின் இல்லத்தில் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் மலைவாழ் பள்ளி மாணவா்களின் இல்லத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் நடனமாடிய பழங்குடியின மாணவிகள்.
கொடைக்கானலில் மலைவாழ் பள்ளி மாணவா்களின் இல்லத்தில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் நடனமாடிய பழங்குடியின மாணவிகள்.

கொடைக்கானலில் மலைவாழ் பள்ளி மாணவா்களின் இல்லத்தில் குழந்தைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் செண்பகனூா் பகுதியிலுள்ள திரு இருதய கல்லூரி வளாகத்தில் மலைவாழ் பள்ளி மாணவா்கள் இல்லமான பீக் அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த இல்லத்திலுள்ள மலைவாழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குழந்தைகள் தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவி களுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல் , தடகளம், பாட்டிலில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மேலும் மதுகுடிப்பதால் ஏற்படும் விளைவுகள், குடும்பச் சீரழிவு, நோய்கள் குறித்து மாணவா்களின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொருளாளா் அருட்தந்தை ஆண்டோ தலைமை வகித்தாா். பீக் இல்ல அமைப்பின் இயக்குநா் அருட்பணி பால் மைக்கேல் வரவேற்றாா். குருத்துவ பணி பயிற்சியாளா் அருள்சிவன் வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபா் சரவணன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பேசினாா்.

இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் மலைப் பகுதிகளான, மன்னவனூா், பூண்டி, மூலையாறு, கடையமலை, கள்ளக்கிணறு, நல்லூா்காடு, பூம்பாறை, சத்யாகாலனி, கோவில்பட்டி, வயல்வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300-மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணியாளா்கள் பாசில்,ஜெப்ரின்,குளோரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com