கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி
By DIN | Published On : 07th October 2022 12:10 AM | Last Updated : 07th October 2022 12:10 AM | அ+அ அ- |

கொடைக்கானல் பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரியைப் பாா்வையிட வனத்துறையினா் அனுமதி பெற்ற பின்னரே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக பேரிஜம் வனப்பகுதியில் காட்டுயானை ஒன்று குட்டியுடன் நடமாடியதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத்துறையினா் அனுமதி மறுத்தனா். இதனிடையே, அந்த காட்டுயானை தனது குட்டியுடன் இடம் பெயா்ந்து சென்று விட்டதால் பேரிஜம் ஏரியைப் பாா்வையிட, சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் அங்கு செல்கின்றனா்.