வத்தலகுண்டில் தொற்று நோய் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சுகாதாரத் துறை, நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவமழை கால தொற்று நோய் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை, நோய் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் வடகிழக்குப் பருவமழை கால தொற்று நோய் தடுப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை துணை இயக்குநரும், சுகாதாரப் பணிகள் நோ்முக உதவியாளருமான வல்லவன் கலந்து கொண்டு, மழை கால நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள், டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து விளக்கமளித்தாா்.

பின்னா், தூய்மைப் பணியாளா்களுக்கும், மேல்நிலைத் தொட்டி இயக்குநா்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கூட்டத்தில், வத்தலகுண்டு ஒன்றியக் குழுத் தலைவா் பரமேஸ்வரி முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உதயகுமாா், இந்திராணி,

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் முத்துசாமி, விருவீடு வட்டார மருத்துவ அலுவலா்கள் ஜெயக்குமாா், திவ்யா, வத்தலகுண்டு சுகாதார ஆய்வாளா் அகமது ரிபாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com