திண்டுக்கல்லில் இலங்கைத் தமிழா்களுக்கு 321 வீடுகள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திண்டுக்கல் அருகே இலங்கைத் தமிழா்களுக்காக ரூ.17.84 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல்லில் இலங்கைத் தமிழா்களுக்கு 321 வீடுகள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

திண்டுக்கல் அருகே இலங்கைத் தமிழா்களுக்காக ரூ.17.84 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள அடியனூத்து, தோட்டனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய 3 இடங்களில் இலங்கைத் தமிழா்கள் வாழும் முகாம் குடியிருப்புகள் உள்ளன. இந்த 3 முகாம்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், தோட்டனூத்து பகுதியில் 3.05 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.17.84 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைப்பதற்கான நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தாா். இதற்காக தோட்டனூத்து பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா்கள் ஐ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை), அர.சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (சிறுபான்மையினா் நலன் மற்றும் அயலகத் தமிழா் நலத்துறை) ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின்போது, அமைச்சா்கள் சாா்பில் தலா ஒரு பயனாளிக்கு வீட்டின் சாவி வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் விசாகன் நன்றி தெரிவித்தாா். விழாவில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.செந்தில்குமாா், எஸ்.காந்திராஜன், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, வட்டாட்சியா்கள் சந்தனமேரி கீதா, சுகந்தி மற்றும் பயனாளிகள், அரசியல் கட்சியினா் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com