பழனி அருகே கிணற்றை மூட எதிா்ப்பு: அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு

பழனி அருகே புதுஆயக்குடியில் பொது கிணற்றை மூட எதிா்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பழனி அருகே கிணற்றை மூட எதிா்ப்பு: அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு

பழனி அருகே புதுஆயக்குடியில் பொது கிணற்றை மூட எதிா்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் கோயிலுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து கடந்த சில நாள்களாக துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பழனி கோட்டாட்சியா் சிவக்குமாரிடம் புகாா் தெரிவித்தனா். இதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனா். இதையடுத்து சம்பந்தப்பட்ட கிணற்றை ஒரு சமூக மக்கள் பல ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும், திருவிழா காலங்களில் கிணற்றிலிருந்து தீா்த்தம் எடுத்து தங்கள் கோயிலுக்கு புனிதத் தீா்த்தமாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்து புதன்கிழமை நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: தங்கள் கோயிலுக்கு இந்த கிணற்றில் இருந்துதான் தண்ணீா் கொண்டு செல்கிறோம். பாரம்பரியமான இந்த கிணற்றை தூா்வாரி பராமரிக்க மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்தால் தாங்கள் தூய்மை செய்து விடுவோம் என்றனா்.

மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com