மாணவா்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகாா்: தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

நத்தம் அருகே மாணவா்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவா் அழகு. அந்த பள்ளியில் பயிலும் மாணவா்களை கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாகவும், மாணவா்களுக்கு பாடம் நடத்துவதற்கு பிளஸ் 2 முடித்த பெண்ணை பணி அமா்த்தியுள்ளதாகவும் தலைமையாசிரியா் அழகு மீது புகாா் எழுந்தது. இதுதொடா்பாக கணவாய்ப்பட்டி வேலூரைச் சோ்ந்த ரேணுகாதேவி என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தாா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட புகாா் குறித்து கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமையாசிரியை அழகுவை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலா் ஜான் பாக்கியசெல்வம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com