மருதாநதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்துப் பேசியதாவது:

இந்த நீா்த்தேக்கத்திலிருந்து 120 நாள்களுக்கு முதல் 30 நாள்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் என மொத்தம் நாளொன்றிற்கு 90 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுகிறது. மீதமுள்ள 90 நாள்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடி தண்ணீா் முதல்போக சாகுபடிக்கு திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம், அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 5,943 ஏக்கா் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி, கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் 640 ஏக்கா் விவசாய நிலங்களும் என மொத்தம் 6,583 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்தி மகசூல்பெற வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுகுமாறன், உதவி செயற்பொறியாளா், செல்வம், உதவிப்பொறியாளா் கண்ணன், ஆத்தூா் (மேற்கு) ஒன்றிய திமுக செயலா் ராமன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மணலூா் மணிகண்டன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com