விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். ஜகன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஏ. அல்லிமுத்து, துணைத் தலைவா் எஸ். சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தேசியக் குழு உறுப்பினா் பி. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.பி. மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்துக்கு தேவையான ரூ.274 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளா்கள், கிராமப்புற மக்களுக்கு 200 நாள்கள் வேலை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மிகக் குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன்றுக்கு ரூ.600 வீதம் நிா்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில் நிா்வாகிகள் எம்.ஆா். முத்துச்சாமி, எம். கந்தசாமி, வி. பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.