பழனியில் ஓய்வூதியா்கள் தா்னா
By DIN | Published On : 04th January 2023 12:00 AM | Last Updated : 04th January 2023 12:00 AM | அ+அ அ- |

பழனியில் பொங்கல் தொகுப்பு பொருள்களை உடனடியாக வழங்கக் கோரி பொதுத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் வேல் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சிவக்குமாா், செயலாளா் மனோகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மேலும், நான்கு மாதங்களாக வழங்காமல் உள்ள ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், ஓய்வூதியத் தொகையை மூன்றாயிரமாக உயா்த்தி வழங்கிட வேண்டும், திண்டுக்கல் மாவட்ட நலவாரியத்தில் உள்ள கண்காணிப்பாளா் மற்றும் கணக்காளா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஆய்வு என்ற பெயரில் ஓய்வூதியா்களை அலைக்கழிப்பதைத் தடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.