சாலைப் பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 13th January 2023 02:01 AM | Last Updated : 13th January 2023 02:01 AM | அ+அ அ- |

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஓட்டுநா்களுக்கு விநியோகித்த அரசு போக்குவரத்துக்கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் எம்.டேனியல் சாலமன்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (மதுரை) திண்டுக்கல் மண்டலம் சாா்பில் 34-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மண்டலப் பொது மேலாளா் எம்.டேனியல் சாலமன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழக அரசு சாா்பில் ஜன.11 முதல் ஜன. 17-ஆம் தேதி வரை 34-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சாா்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், விபத்து தடுப்பு குறித்தும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கோட்ட மேலாளா் எஸ்.கோபாலகிருஷ்ணன், ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.