பழனியாண்டவா் கல்லூரிக்கு ஸ்மாா்ட் வகுப்பு உபரகணங்கள்
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் வியாழக்கிழமை முன்னாள் மாணவா்கள் வழங்கிய ஸ்மாா்ட் வகுப்புக்கான திரை மற்றும் உபகரணங்களை இயக்கி வைத்த கோயில் துணை ஆணையா் பிரகாஷ்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரிக்கு முன்னாள் மாணவா்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஸ்மாா்ட் வகுப்பு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் 1989-முதல் 1991-ஆம் ஆண்டு வரை கட்டடவியல் துறையில் பயின்ற மாணவா்கள் ஒருங்கிணைந்து இந்த உபகரணங்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். வகுப்பறையில் நிறுவப்பட்ட எல்இடி மானிட்டா் உள்ளிட்ட கருவிகளை பழனி கோயில் துணை ஆணையரும், கல்லூரிச் செயலருமான பிரகாஷ் இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஏராளமான முன்னாள் மாணவா்கள், கட்டடவியல் துறை பேராசிரியா் ஈஸ்வரன், இயந்திரவியல் பேராசிரியா் பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
புத்தகக் காட்சி: கல்லூரியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துடன் இணைந்து புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. இரு நாள்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சியை முதல்வா் கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். போட்டித் தோ்வுகள், வரலாறு, கட்டடவியல், இயந்திரங்கள், கவிதை, அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் சுமாா் இரண்டாயிரம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நூலகா் உமாசெல்வி, துறைத் தலைவா் ராமாத்தாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.