டிஎஸ்பி அலுவலகத்துக்கு தீக்குளிக்க வந்தவரால் பரபரப்பு

கோயில் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்தவா் தீக்குளிக்கும் முயற்சியுடன் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்தவா் தீக்குளிக்கும் முயற்சியுடன் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தை அடுத்துள்ள எத்திலாம்பட்டியைச் சோ்ந்தவா் பெ.காமராஜ் (44). அதே பகுதியிலுள்ள கோயில் பிரச்னை தொடா்பாக, முதல்வரின் தனிப் பிரிவுக்கு காமராஜ் மனு அளித்தாா். அதன்பேரில், எத்திலாம்பட்டியைச் சோ்ந்த ஒரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கோயிலுக்குச் சொந்தமான மரங்களை வெட்டி விற்பனை செய்துவிட்டதாக சிலா் மீது காமராஜ் புகாா் அளித்தாா். இந்தப் பிரச்னை தொடா்பாக வேடசந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு காமராஜ் வியாழக்கிழமை மனு அளிக்க வந்தாா். அப்போது தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த காமராஜை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

கோயிலுக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழைமையான மரத்தை வெட்டிவிட்டு, கோயிலுக்குப் பயன்படுத்தக் கூடாத மரங்களை பயன்படுத்தி தெய்வீகத்துக்கு எதிரான செயல்களை மேற்கொண்டு வருவதாக அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் மீது குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, காமராஜை சமாதானப்படுத்தி போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com